ராஜபக்சக்களை எழுப்பிவிட முடியாது:கஜேந்திரகுமார்!
ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறி உறவுகளின் வேதனையுடன் அரசாங்கம் விளையாடியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைக்கும் முறையினை கைவிடும் எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் வெறுப்பினை வெளிப்படுத்திவரும் சூழலில் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதாக மாறிவிடும் என கூறினார்.

No comments