அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!



இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கத் தீர்மானித்துள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரை இந்திய மீனவர்கள் படகுகளால் மோதிப் படுகொலை செய்யப்பட்டமையினையடுத்து வீதிகள் முடக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினர் உத்தரவாதம் வழங்கவேண்டும், அதேபோல கடற்றொழில் அமைச்சரும் வாக்குறுதி வழங்கவேண்டும்.வழமைபோல வாக்குறுதி வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அத்துமீறல்கள் தொடர்ந்தால் தொழில் முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும்,

அதேபோல பிரதேச செயலகங்கள், கச்சேரி உட்பட்ட அரச திணைக்களங்களை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொலைபேசி ஊடாக ஆளுநருடன் ஒருவருக்கு உரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவதாக இலங்கை காவல்துறை விடுத்த கோரிக்கையை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.


No comments