ஒருபுறம் பேச்சு: மறுபுறம் போர்


ஒருபுறம் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை மேசைகளில் பேச்சுவார்த்தை நடத்த மறுபுறம் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 5வது நாளாகவும் தொடர்கின்றது.

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் நாட்டின் இரண்டாவது நகரமான கார்கிவில் டஜன் கணக்கான பொதுமக்களைக் கொல்லப்பட்டனர்.

அதே நேரத்தில் தலைநகரான கிய்வில் விமானத் தாக்குதல் போருக்கான ஒலிச்சமிக்கைகள் மீண்டும் ஒலித்தன.

வடக்கு நகரமான செர்னிஹிவ் (Chernihiv) இல் கடுமையான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா பல முனைகளில் உக்ரைனைத் தாக்குகிறது, ஆனால் உக்ரேனிய எதிர்ப்பால் அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.

தாக்குதல் நடத்தப்படும் மூன்று நகரங்களும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளன.

No comments