புலிகள் குறித்த கருத்து: மன்னிப்புக் கோரினார் கஜேந்திரன்!!


தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும். புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனின் கருத்துத் தெரிவித்தார். தற்போது அக்கருத்து தொடர்பில்  மன்னிப்புக் கோரியுள்ளார். 

டன் தொலைக்காட்சி நடத்திய எது சரி எது பிழை என்ற விவாத நிகழ்ச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் கலந்துகொண்டுனர். இதில் பேசுபொருளாக 13வது திருத்தச்சட்டம் இருந்தது. இதில் புலிகள் தொடர்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது கருத்தை முன்வைக்கும் போது  குறுக்கீடு செய்து தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும், புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று கருத்தைப் பதிவிட்டார்.

இக்கருத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் மனவுளைச்சாலையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் ஊடகங்களும் இதை வெளிக்கொண்டுவந்த நிலையில்  அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் விளக்கத்தையும் அளித்து வருகிறார். 

No comments