அருந்திக பெர்னாண்டோவை வீடு செல்ல ஆலோசனை!

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தபாய கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்துவருகின்ற நிலையில் ஏற்கனவே சிறைக்கு சென்று துப்பாக்கியால் கைதிகளிற்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் சென்று மாணவர்கள் மீது வெளி நபர்கள் தாக்கிய   சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸில் சரணடைந்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின்  மகனான 23 வயதான அவிந்த ரந்தில ஜெஹான் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் வெளி நபர்கள் புகுந்து  தாக்கியதில்  4 மருத்துவ பீட மாணவர்கள்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments