நீடிக்கும் உக்ரைன் பதற்றம்: நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளில் ரஷ்யா!!


ரஷ்யக் கடற்படையினர் கருங்கடலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளை இன்று திங்கட்கிழமை நடத்தியது.

பெலாரஸில் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளையும், கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள கருங்கடலில் கடற்படைப் பயிற்சிகளையும் நடத்துகிறது. 

30 க்கும் மேற்பட்ட போக்குவரத்து மற்றும் தாக்குதல் உலங்குவானூர்திகளுடன் பயிற்சிகள் தந்திரோபாய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

சமநேரத்தில் ரஷ்யாவின் வான்படை வடக்கு லெனின்கிராட் பிராந்தியத்தில் எதிரிகளின் விமானத் தாக்குதல்களை S-400 ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தி முறியடிப்ப செய்யும் பயிற்சிகளையும் செய்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.

ரஷ்யா தனது காஸ்பியன் புளொட்டிலாவிலிருந்து கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடல்களுக்கு போர்க் கப்பல் மற்றும் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் கொண்ட கப்பல்களின் ஒரு பிரிவை அனுப்பும் என்று இஸ்வெஸ்டியா நாளிதழ் இராணுவ வட்டாரங்களை மேற்கோள்ளிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதற்கிடையில், சுகோய் சு-30 போர் விமானக் குழுக்கள் திங்களன்று ரஷ்யா மற்றும் பெலாரஸ் இடையேயான எல்லையில் கூட்டு ரோந்து விமானத்தை நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments