இலங்கை முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம்!



மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய தென்னாசியாவிற்கான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கருத்துவேறுபாடுடைய விடயங்கள் உள்ளன,ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் உள்ளது.

ஐக்கியநாடுகளின் செயற்பாடுகளிற்கான பிரிட்டன் ஆதரவுகுறித்து நான் இலங்கைஜனாதிபதியுடனும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் நான் ஆராய்ந்தேன்.

இலங்கை அரசாங்கம் மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து நான் எடுத்துரைத்தேன்.

இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் நன்மையளிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தி குறித்த அரசாங்கத்தின் பேராவலுடனான திட்டத்திற்கான அடிப்படை இது.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையகத்தின் செயல்முறையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தை நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மேலும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினேன்..

இது நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைகுறித்த அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஆதரவாக அமையும்.மேலும் இது அனைத்து இலங்கையர்களிற்கும் அவசியமான பொருளாதாரபாதுகாப்பிற்கு அவசியமானஸ்திரதன்மையை உறுதிசெய்யும்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் அனைத்து விடயங்களிலும் ஆக்கபூர்வமான சகாவாக விளங்க விரும்புகின்றோம்.

மனித உரிமைகள் உட்பட ஐக்கிய இராச்சியம் எந்த விவகாரங்களில் ஆதரவளிக்கலாம் என்பதை நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளை பொறுத்தவரை இலங்கை தொடர்பான முகன்மை குழுவின் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையுடனான எங்கள் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நாங்கள் தொடர எண்ணியுள்ளோம்.

நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய தனது அனைத்துநடவடிக்கைகள் குறித்தும் அதனுடன் தொடர்புபட்ட இலங்கையர்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கம் தெளிவாக தெரிவிக்கவேண்டியது முக்கியம்.


No comments