யூ-ரியூபர் விடுதலை கோரி மகன் ஒப்பம்!

 


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள யூ ரியூபர் டிவன்யா மற்றும் டினேஸ் நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைகளிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.நீண்ட நாட்களாக நாலாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறை மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments