கைதிகளிற்கு கொலை மிரட்டல்:கிடப்பில்அனுராதபுரம் சிறைச்சாலையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் காவல்துறை அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் பற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு மீண்டும் ஆறு மாதங்களின் பின்னராக எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. 

இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டி மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


No comments