போடா வெளியே துரோகி:மீனவர்கள் சீற்றம்!


கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை போடா வெளியே என கத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்கள் மதுபோதையில் நிற்பதாக பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளார் டக்ளஸ்.

இந்திய மீனவர்களது அத்துமீறிய படகுகளை சிறைப்பிடிக்க உள்ளுர் மீனவர்கள் முற்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அதனை தடுத்து சட்டமொழுங்கை கையில் எடுக்கவேண்டாமெனவும் இலங்கை கடற்படை  அதனை பார்த்துக்கொள்ளுமெனவும் டக்ளஸ் பருத்தித்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிற்கு நேற்றிரவு ஆலோசனை வழங்கினார்.ஆனால் அவரது கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் போடா வெளியே துரோகி என கத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்கள் மதுபோதையில் நிற்பதாக அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்களிற்கு பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளார் டக்ளஸ்.

டக்ளஸிற்கு தற்போது எஞ்சியிருக்கும் அரசியல் இந்த இந்திய மீனவர்கள் விவகாரமே.அதையும் கெடுத்து விட்டார்களே பருத்தித்துறை மீனவர்கள் என அனுதாபிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 
No comments