ஆட்சி மாற்றதிற்கு காத்திருக்கிருக்கிறோம்: கர்தினால்

இலங்கை அரசாங்கத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நம்பமுடியாது – புதிய அரசாங்கமாவது நீதி வழங்குமா என காத்திருக்கின்றோம்   என தெரிவித்துள்ளார்  கர்தினால்

தற்போதைய அரசாங்கத்தையோ சட்டமா அதிபர் திணைக்களத்தையோ நம்ப முடியாது என கர்தினால்மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை தடுக்காத சிரேஸ்ட அதிகாரிகளிற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குவது குறித்து அவர்  ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வேறு ஆட்சியின் கீழாவது நீதிவழங்கப்படுமா என காத்திருக்கின்றோம் னவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெறும் விடயங்களால் கவலையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை மறைப்பதன் மூலம் சட்டமாஅதிபர் திணைக்களம் சட்டத்தினை அவமதிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துமூலம் உட்பட பலதடவை வேண்டுகோள்கள் விடுக்கப்ட்ட போதிலும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பல பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளியான விடயங்களை தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கமும் மறைத்துள்ளன என தெரிவித்துள்ள  அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் நீதியை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

No comments