இரு உடலங்களும் கரை ஒதுங்கின!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் இன்று கரையொதுங்கியுள்ளன.

வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே இருவரது சடலங்களும் இன்று நண்பகலும் பிற்பகலும் கரையொதுங்கியுள்ளன.

மீனவர்கள் காணாமல் போன அன்று அவர்கள் கொண்டு சென்ற மீன்பிடி வலைகள் அறுந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன.

தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் இன்று இருவரின் சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.

உயிரிழந்தவர்கள் இருவரும் மாமனாரும் மருமகனும் என்று தகவல்கள் வெளியாகிருந்தமை தெரிந்ததே.

பிறேம்குமாருக்கு 03 பிள்ளைகள் என்றும் தணிகை மாறன் திருமணமாகாத இளைஞர் என்றும் தெரியவந்துள்ளது.

 

No comments