யாழில் நடைபெற்ற விடுதலைப் பொங்கல்!!


அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது.

பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்த விடுதலைப் பொங்கல் என்ற தொனிப்பொருளில் பொங்கல் நடத்தப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு முன்பாக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் இணைந்து இந்த பொங்கல் நிகழ்வை நடத்தினர்.

நீண்டகாலமாக சிறைகளில் இருந்து முதல் ஆசியாவிலுள்ள சிறைக்கைதிகள் தற்போதும் சிறையிலுள்ள கைதிகளின் நிலையை எடுத்துக் கூறும் வகையில் சிறைச்சாலை உடுப்புக்களுடன் கம்பிக்கூட்டுக்குள் நின்று  பொங்கி உள்ளனர்.


குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவினர்கள் மதத் தலைவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments