கஜகஸ்தான் கலவரம் இதுவரை 164 பேர் பலி!!


ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் கடந்த ஒரு வாரம் நடந்த போராங்களில் 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

உயிரிழப்புகள் குறிப்பாக பொதுமக்களை குறிப்பிடுகின்றனவா அல்லது சட்டத்தை அமுலாக்க பயன்படுத்திய காவல்துதுறை மற்றும் படையினரின் இழப்புகளைக் குறிப்பிட்டுள்ளனவா என்பது இதுவரை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் முன்னைய புள்ளிவிபரங்களில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டதாகவும்  26 கலகக்காரர்கள் உயிரிழந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

உயிரிழப்புகள் அந்நாட்டின் மிகப்பொிய நகரான அல்மாட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுவரை அங்கு 103 மரணங்கள் பதியப்பட்டுள்ளது. அந்நகரில் அரசாங்கக் கட்டிடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர். அத்துடன் சில கட்டடிங்களுக்கு தீ வைத்தனர்.

இதுவரை கொல்லப்பட்டோரில் 4 வயது சிறுமி உட்பட 3 சிறார்கள் உள்ளடங்குகின்றனர். 2,200 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர் எனவம் 1,300 பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததாகவும் 5,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் முன்னர் கூறியது.

இதுவே ரஷயா தலைமையிலான அமைதிகாக்கும் படையினர் நாட்டுக்குள் வரத்தூட்டியதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரச நிர்வாகக் கட்டிடங்களை அதிகாரிகள் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் மீட்டெடுத்ததாகவும் அந்நாட்டு அதிபர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

No comments