இத்தாலியில் 45 பேருக்கு போலித்தடுப்பூசி போட்ட தாதி கைது!!


இத்தாலியில் குறைந்தது 45 பேருக்கு போலி கொவிட் தடுப்பூசி போட்டதாக சந்தேகத்தின் பெயரில் தாதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தடுப்பூசிகளை குப்பைப்பெட்டிகளில் எறிந்துவிட்டு நோயாளர்களுக்கு ஊசி போட்டது போல் நடித்து பஞ்சுமூலம் தடவி கொவிட் தடுப்பூசி போட்ட பாசை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த தாதியுடன் தொடர்புபட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்கோனா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சக ஊழியர்களில் சந்தேகம் அடைந்ததை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

ஒரு நபரின் கையில் ஊசி போடுவதற்கு முன் மருத்துவக் கழிவுத்தொட்டியில் ஊசிகளை தாசி போடுவதை காட்சிகள் காட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐந்துபோிடமும் ஊழல், பொய்த்தகவல்களை வழங்கியமை, மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போலி தடுப்பூசி சான்றிதழ்களைப் பெற்றதாகக் கூறப்படும் 45 பேரும் விசாரணையில் உள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments