தமிழக மீனவர்கள் விடுதலை!இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகிய 55 தமிழக மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 19ஆம் 21 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட 55மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை  திணைக்களத்தினால்  ஊர்காவற்றுறை நீதிமன்றில்  இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்  விளக்க மறியலில் இருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கில் அரச உயர்மட்ட தலையீட்டையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அதிகாரி திணைக்களம் சார்பில் முன்தோன்றிய நிலையில் 55 மீனவர்களிற்கும் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 


No comments