இலங்கை:அரிசி அரசியல் !





இலங்கை மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவ தற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்படி, இந்தியாவிலிருந்து 300,000 மெற்றிக் தொன் அரிசியை விரைவாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சம்பா அரிசிக்குப் பதிலாக இரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்  GR 11 (Short Grain Rice) அரிசியும் இறக்குமதி செய்யப்படும். 

வெளிச்சந்தையில் போதுமான அளவு அரிசி இருப்பை பேணும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்துள்ளார்.

இதனிடையே  இரசாயன உரத் திட்டம் ஒரு நல்ல வேலைத்திட்டம் எனவும், ஆனால் அதன் முடிவுகளை தற்போது காணக் கூடியதாக அமைந்துள்ளதாக முன்னணி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரிசியின் விலை மேலும் உயராது என்றும் இதுவே அதிகபட்ச விலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அதிகள வில் நெல் பயிரிட வேண்டும் என்றும், ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பைத் தான் ஏற்க முடியாது என்றும், அது தனது பிரச்சினை யல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments