கோத்தாவால் வாழ்வு போனது:மஹிந்தானந்த அளுத்கமகேகோத்தபாயவின் சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகள் அமைப்புக்களுடன் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

பெரும்போக இயற்கை விவசாய வேலைத்திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயற்றவையெனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சேதன பயிர்ச்செய்கை திட்டத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு கோத்தபாய  அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் அளுத்கமகே குறிப்பிட்டார்.


No comments