கூட்டமைப்பினர் இணங்கினர்?இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றிணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு இறுதித் தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன மறுத்துள்ளது. 

எனினும் ஆவண தயாரிப்புக்கான பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கென தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய பங்காளி கட்சியான டெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களுக்காக அனுப்பட்ட போதிலும் அதில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ்சும்,மலையக கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.


இந்த நிலையில் குறித்த இரண்டு தரப்பினரது கையொப்பங்கள் இன்றி, தமிழ் தேசிய கட்சிகள் மாத்திரம் கையெழுத்திட்ட ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  குறிப்பிட்டுள்ளார்.  

No comments