நாளை விடுதலைப்பொங்கல்!


 தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி விடுதலைப்பொங்கள் யாழில் பொங்கப்படவுள்ளது.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் அரசியல் கைதிகளது குடும்பங்களது உதவியுடன் நாளை வியாழக்கிழமை முற்றவெளியில் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தும் விடுதலைப்பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை விடுதலைப்பொங்கல் நிகழ்வினை பற்றிய தெளிவூட்டும் ஊடக சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றிருந்தது.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் பங்கெடுத்த ஊடக சந்திப்பில் அரசியல் கைதிகளது விடுதலை பற்றிய குரல்கள் ஓய்ந்து போயுள்ளதாக தெரிவித்தார்.

அமைதியாக இருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிடுவார்கள் என கடந்த ஆண்டில் பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதனை நம்பி பலரும் அமைதி பேணினர்.

ஆனால் விடுதலையான ஒரு சில தமிழ் அரசியல் கைதிகள் கூட தமது தனிப்பட்ட முயற்சியாலேயே விடுதலை பெற்றனர்.

இனியும் அரசியல் கைதிகளை பேசாமல் இருந்தால் விடுவிப்பார்களென நம்பவில்லை.

தமிழ் அரசியல்  கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அனைவரும் குரல் எழுப்பவேண்டும்.

நாளை வியாழக்கிழமை முற்றவெளியில் அரசியல் கைதிகளது வாழ்வில் விடியல் தோன்றவென முன்னெடுக்கப்படவுள்ள விடியல் பொங்கலில் அனைவரும் மத,கட்சி வேறுபாடின்றி பங்கெடுக்க கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments