சாமி கண்ணை குத்தட்டும்!கோத்தாவின் பணிப்பின் பேரில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் மறைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளது.

நாட்டின் எந்த ஆட்சியாளரும் தன் அன்புக் கணவனுக்கு நீதி வழங்காத நிலையில், தன் கணவனிற்கு நீதி வேண்டி, தலை மொட்டையடித்து, கடவுளின் முன் நியாயம் கேட்டுள்ளார் பிரகீத்தின் மனைவி சந்தியா.

நம் காலத்தின் துணிச்சலான பெண்மணி சந்தியா எக்னலிகொட என தென்னிலங்கை ஊடகங்கள் அவரை கொண்டாடியுள்ளன.

இன்றைய தினம் தனது கணவனிற்கு நீதி கோரி மொட்டையடித்துக்கொண்ட சந்தியா ஆலயத்தில் வழிபாட்டினை முன்னெடுத்திருந்தார்.

கோத்தபாயவின் பணிப்பின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட இராணுவ புலனாய்வு பிரிவினர் தண்டனையின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments