புளோரிடாவில் கப்பல் கவிழ்ந்தது! 39 பேரைக் காணவில்லை!


புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் இருந்து மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் இருந்து மாயமாகிய 39 பேரை தீவிரமாக தேடி வருவதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று, பஹாமாஸ் தீவில் உள்ள பிமினி என்ற பகுதியில் இருந்து படகில் 40 பேர் பயணம் மேற்கொண்டனர்.  படகு, ஃபோர்ட் பியர்ஸில் இருந்து 45 மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சென்ற கடலோர காவல் படையினர், படகை பிடித்தவாறு தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

படகில் மீதம் இருந்த 39 பேர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

No comments