புர்கினா ஃபாசோவின் ஆட்சிக் கவிழ்ப்பு! மக்கள் கொண்டாட்டம்!


மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

புர்கினா ஃபாசோவில் நடந்தது இராணுவ சதி என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியதோடு அதனைக்  கண்டித்துள்ளார்.  

ஃபாசோவில் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.  அந்நாட்டு அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில், இராணுவத்துக்கு அதிபர் ரோச் போதிய ஆதரவு தருவதில்லை என எதிர்ப்பு எழுந்தது.  

இந்நிலையில், அதிபர் ரோச்சை பதவியில் இருந்து நீக்கி, ஆட்சியைக் கலைத்து இருப்பதாக புர்கினா ஃபாசா இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.  

அதிபர் ரோச் தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.  

இதனிடையே, அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மக்கள், தலைநகர் வாஹுடூஹேவில் திரெண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு ஆபிரிக்க இராணுவங்கள் கடந்த 18 மாதங்களில் மாலி, கினியா மற்றும் சாட் ஆகிய நாடுகளில் மேலும் நான்கு சதிப்புரட்சிகளை நிகழ்த்தியுள்ளன.

No comments