வெள்ளத்தில் விழுந்த விவசாயி மாயம்


அம்பாறை , ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிமேடு வடக்கு வயற்பகுதியான பள்ளப்பாமாங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில்,  தவறி விழுந்த விவசாயி, காணாமற் போயுள்ளார்.

சம்பவம் இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக கோளாவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய கணபதி கிருபைராஜன் என்பவரே இவ்வாறு இன்று (03) காணாமற் போயுள்ளார் எனத் தெரிவித்தார்.

வெள்ள நீர் வாய்க்காலில் நிரம்பியுள்ளது.  அந்த வாய்க்காலின் துரிசில் இருந்த பலகையை அகற்ற முற்பட்டபோதே அவர், தவறி துரிசிலின் கீழே விழுந்து, வௌளநீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான மழை பெய்துவருவதால்  அந்த வயல்கள், வாய்க்கால்கள் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

No comments