ஆசிரியர்களிற்கு ஜயாயிரம் வரவில்லை?

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஆசிரியர்களின் அதிகரித்த சம்பளத்தை வழங்காத ஒரேயொரு மாகாணம் வட மாகாணமே என இலங்கை

ஆசிரிய சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை ஆசிரியர் சங்கம் - வடமாகாண கல்வி முறைகேடுகள் குறித்து, ஏறத்தாள 100 பக்க ஆவணங்களுடனான ஆதாரங்களை கடந்த மாதம் 29ம் திகதி வட மாகாண ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்கு சுயாதீன விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலும், முறைகேடுகளை தொடர்ந்தும் ஊக்குவித்தும், இது போன்று முறைகேடுகளில் தொடர்ந்தும் அதிகாரிகளை செயற்பட அனுமதியளிக்கும் வகையில் வடமாகாண ஆளுநர் செயற்பட போகிறாராவெனவும் ஆசிரிய சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


No comments