செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்!

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக மீண்டும் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, புதிய தவிசாளராக வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவரும்  வரவு செலவு திட்ட தோற்கடிப்பினால் அண்மையில் பதவியிழந்திருந்தார்.

இந்நிலையில் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு அமர்வு, இன்று (15) இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மீண்டும் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.


வல்வெட்டித்துறை நகர சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும்  சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஓர் உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments