வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இவரின் விஜயத்தைத் தொடர்ந்து பல பெரிய சீன முதலீடுகள் இலங்கைக்கு வரக்கூடும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் அவரது இரு நாள் விஜயம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான விஜயத்தை தொடர்ந்து சீன வெளிவிவகார அமைச்சர் மாலத்தீவுக்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments