சகோதரர்கள் மோதல்:கதிரைகள் கவிழ்கின்றன!

 
இலங்கை முதலீட்டு சபையின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் பதவி விலகியுள்ளார். 

இலங்கை முதலீட்டு சபை பதவி விலகலிற்கான தெளிவற்ற காரணத்தை அறிவித்துள்ளது.

இலங்கை முதலீட்டுச்சபைக்கு உயர் சம்பளத்துடன் 29 பேரை நியமிப்பது என முன்னர் எடுக்கப்பட்ட முடிவை இரத்துச்செய்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமையே இந்த பதவி விலகலிற்கான காரணம் என தகவல்கள் வெளியாகின்றன.

புதிய முதலீடுகளை கவர்வதற்கு புதிய திறமை அவசியம் என்ற அடிப்படையிலேயே புதியவர்களை நியமிப்பதற்கு இலங்கை முதலீட்டுசபை தீர்மானித்திருந்தது. எனினும் இலங்கை முதலீட்டுசபை தொழிற்சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்த்தன.

இந்நிலையில் இலங்கை முதலீட்டு சபை பதவி விலகலுக்கு கோப் குழு தலைவர் சரித ஹேரத் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments