வடக்கு தீவுகள் இந்தியாவிற்கும் இல்லையாம்!வடக்கில் மூன்று தீவுகள் தொடர்பான வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்இ வடக்கில் மூன்று தீவுகளில் முன்னெடுக்கவுள்ள சூரிய சக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு வடக்கில் மூன்று தீவுகள் தொடர்பான வேலைத்திட்டத்தை இடைநிறுத்துவதாக சீனத் தூதரகம் கூறியுள்ள நிலையில்இ  அந்தத் திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றும்இ உர கப்பல் தொடர்பான பிரச்சனையை தொடர்ந்து  சீனாவுடனான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த அமைச்சரவை ரமேஷ் பத்திரண கூறுகையில்

அந்தத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.  

இதேவேளை உரப் பிரச்சனையில் இருநாடுகளுக்கும் இடையே நட்புறவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

No comments