இலங்கையில் மின்துண்டிப்பு தொடரும்!இலங்கையில்  சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 09.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வர சில நாட்கள் தேவைப்படுவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments