மின்சாரம் திரும்புவது கேள்விக்குறி?இலங்கையில் கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மின் தடைக்கு காரணம் என மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று முற்பகல் 11 30 மணியளவில் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மின் விநியோகத்தை சரிசெய்வதற்கான பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாகவும்  எனினும் முழுமையான மின் விநியோகத்தை வழங்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து கூற முடியாது எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

No comments