எனக்கு ஏதும் தெரியாது:பத்திநாதர்



கிழக்கு மாகாண தொல்பொருள் ஜனாதிபதி  செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூவரில் எனது பெயரும் இருப்பது தொடர்பில் எனக்குத் தெரியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார். 


கிழக்கு மாகாண சபையின் தொல்பொருள் செயலணி என உருவாக்கப்பட்ட செயலணியில் முதலில் 13 உறுப்பினர்களும் பின்னர் மூவரும் இணைக்கப்பட்டபோதும் அடைவரும் சிங்கள இனத்தவர்களாகவே காணப்பட்டமை தொடர்பில் அதிக விமர்சணங்கள் முன் வைக்கப்பட்டன.


இதனையடுத்து கிழக்கு செயலணி அமைத்து 13 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக இரு தமிழர்களும் ஒரு முஸ்லீமும் இணைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 


இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ளவர்களில் ஒருவரான மன்னாரைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அ.பத்திநாதனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது தொடர்பில் வ்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரையில் தனக்கு தெரியாது எனவும் இத் துறையானது தனக்கு பரீட்சையம் அற்ற ஒன்று எனவும் தெரிவித்தார்.


முஸ்லிம் பிரதிநிதி ஒருவருடன் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளரினால்  வர்த்தகமானி பிரசுரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments