யாழ்ப்பாணத்திலும் தவிசாளர்களிற்கு அழைப்பு!


நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் தொடர்பில் நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாவீரர் தினம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே இவ் அழைப்புக்கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவீரர் தினம் மற்றும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரின் நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிராக பொலிசார் வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம் முறை உப தவிசாளர் கபிலனின் பெயரும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments