கமல்ஹாசனுக்கு கொரோனா!! மருத்துவமனையில் அனுமதி!!


மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று திங்கட்கிழமை சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் படப்பிடிப்புக்கு இடையில் சமீபத்தில் பல்வேறு பணிகளுக்காக இவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் சென்னை திரும்பி வந்தவருக்கு செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இவரின் உடல்நிலை குறித்து சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலுக்கு சுவாச பாதை தொற்று மற்றும் காய்ச்சல் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இருப்பினும் அவர் சாதாரண நிலையில் உள்ளது, என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது அவரின் உடல்நிலை மோசமடையவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


No comments