இந்திய மீனவர்களிற்கு 10வருட சிறை!

எல்லை தாண்டி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இந்திய மீனவர்களுக்கும் பருத்துறை நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு அவர்களுடைய சொத்துக்களான படகுகள் மற்றும் வலைகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை கடற்படையால் கடந்த 13-ம் திகதி கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பிரகாரம் யாழ்.சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

எனினும் மீண்டும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கைது செய்யப்படுமிடத்து ஒத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை அமுலாக்கபடும்.


No comments