ஒரு நாடு ஒரே சட்டம்!! செயலணியை இரத்து செய்யுங்கள்!! கத்தோலிக்க பேரவை!!

 


“ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது.

இலங்கையில் கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் மற்றும் கிறிஸ்தவ பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளாமை செயலணியின் கருப்பொருளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல் நியமிக்கப்பட்ட செயலணி, “ஒரு நாடு ஒரே சட்டம்” என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.

செயலணியின் தலைவர் நியமனம், தலைவராக நியமிக்கப்பட்ட நபரின் கடந்த கால பதிவுகளை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை கொள்வதாக தெரிவித்துள்ளது.


No comments