குப்பைக்கள் வீசப்பட்ட பயணப் பையில் சடலம் மீட்பு!!


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பயணப் பை ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடமொன்றில் பயணப் பை வீசப்பட்டிருந்தது.

எனினும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில் சப்புகஸ்கந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments