ஃபிஃபா தலைவர் இலங்கையில்!!


அனைத்துலக கால்பந்து (FIFA-ஃபிஃபா) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட அவரை,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,   இலங்கை வெளிவிவகார அமைச்சு, விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.

தலைவர் கிஹானி இன்பென்டினோவுடன் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின்   உயர் அதிகாரிகள் ஐவரும்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.


இலங்கையில் நடைபெறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய கால்பந்தாட்ட கிண்ணப போட்டியின் இறுதிப் போட்டியில்  சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவே அவர்  வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இறுதிப் போட்டிகள் சீஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

No comments