வவுனியா:செல்பியால் மரணம்!வவுனியா, கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் முருங்கன் பகுதியிலிருந்து, செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி தங்களது கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

அவ்வேளையில் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இளைஞர் பலியாகியுள்ளார். மற்றைய இளைஞர் பாலத்தின் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.

முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (வயது 19) என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

No comments