உலகம் சுற்றும் ஒரு வயது குழந்தை, மாதம் 2 லட்சம் வருமானம்!

 


தற்போது சமூக வலைத்தளங்களை வைத்து பலரும் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பிரபலமடைந்து பலர் மாதம் லட்சக்கணக்கில் வரை சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். சமையல், ஆரோக்கியம், சுற்றுலாப் பயணம், உடற்பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இங்கு நாம் பார்க்க கூடிய குழந்தையின் பெயர் ‘பிரிக்ஸ்’ ஆகும். பிரிக்ஸின் பெற்றோர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.


இந்த குழந்தையின் இன்ஸ்டாகிராம் கணக்கை நிர்வகிப்பவர் பிரிக்ஸின் தாய் ஜெஸ். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 31 ஆயிரம் பேர்கள் பிரிக்ஸை பின்பற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் மாதம் 2 லட்சம் பிரிக்ஸ் சம்பாதிக்கிறார். அமெரிக்க டாலரில் 1,000 டாலர் ஆகும். பிரிக்ஸின் தாயான ஜெஸ் ஒரு சுற்றுலா விரும்பி. இவர் தனது திருமணத்திற்கு முன்பு பகுதி நேர சுற்றுலா பயணிகள் என்ற வலைப்பதிவைத் தொடங்கினார்.

இதன் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்ய பணத்தினை சேகரித்தார். கர்ப்பத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை முடியும் என்று நினைத்து கொண்டேன். ஊர் சுற்ற முடியுமா என்று தெரியவில்லை. அப்போது நானும் என் கணவரும் ஒன்றாக சேர்ந்து யோசித்தோம். குழந்தையை வைத்து கொண்டே ஊர் சுற்றினால் என்ன என்று யோசித்தோம். அப்படி தான் குழந்தை பிரிக்ஸின் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினோம்.

மற்றவர்களை போல் அல்லாமல், வித்தியாசமாக செய்ய முடிவெடுத்தேன். அக்டோபர் 14, 2020 தான் பிரிக்ஸ் பிறந்தநாள் ஆகும். தற்போது தான் ஒரு வயது முடிந்தது. கரடிகளைப் பார்க்க அலாஸ்காவிற்கும், ஓநாய்களைப் பார்க்க யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிற்கும், டெலிகேட் வளைவைப் பார்க்க உட்டா நகரத்திற்கும் அழைத்து சென்றிருக்கிறோம்.

இதுவரை பிரிக்ஸ் 45 அமெரிக்க விமானங்களில் அலாஸ்கா, கலிபோர்னியா, புளோரிடா, உட்டா மற்றும் இடாஹோ உட்பட 16 அமெரிக்க மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். கொரோனாவிற்கு முன்பு பெரிதாக திட்டமிடவில்லை. தற்போது உலகின் பல பகுதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் குடும்பத்தோடு பயணம் செய்து வருகிறோம். அடுத்த மாதம் லண்டன் மற்றும் ஐரோப்பா செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளோம் “ என்று கூறுகிறார் பிரிக்ஸின் தாய் ஜெஸ். உலகம் சுற்றும் வாலிபனைப் போல ‘பிரிக்ஸ்’ ஒரு உலகம் சுற்றும் குழந்தை ஆகும்

No comments