கோத்தா சரிவரார்: போப் இடம் சரணாகதி!

கோத்தபாயவின் வெற்றிக்காக முன்னர் பாடுபட்ட மல்கம் ரஞ்சித்த ஆண்டகை  தற்போது முழு அளவில் எதிர்ப்பாளராக மாறியுள்ளார்.

இந்நிலையில் போர் இடம் அவர் அடைக்கலம் புகுந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் தனது முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வத்திக்கான் கார்டினல் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கடிதத்தில், வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்மெல்கம் ரஞ்சித் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால் விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments