தீயுடன் சங்கமானார் இரகுநாத குமாரதாஸ்!!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், சற்றுமுன்னர், அக்னி உடன் சங்கமமாகியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.


அவரது உடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக அவருடைய உடலுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.


இறுதி நிகழ்வுகள், சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டு நடைபெற்றன.No comments