சுரேன் இராகவனும் பார்வையிட்டார்!வருடத்திற்கு ஒருவர் திட்டத்தின் கீழ் இம்முறை ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு இன்று (17) நண்பகல் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது. 

கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு மீள்ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின்  உறுப்பினர் எஸ்.சத்தியசுதர்சன் அவர்களும் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுடன் இணைந்துகொண்டதாக சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் அவ்வாறு பார்வையிட்டு செல்வது கடந்த பத்துவருடமாக நீடிக்கின்றது.
No comments