தமிழகத்துடன் மோத வைக்க சதி!
இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக சட்டத்தரணி ந.சிறீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரினவாத சக்திகளின் இந்த சதித் திட்டத்திற்கு சில தமிழ் அரசியல் தலைவர்களும் துணை போகின்றார்களா எனவும் அவர் கேள்வி உள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய மீனவர்கள் 23 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

போரின் போது இலங்கை கடற்படையின் வேட்டுக்களுக்கு நூற்றுக்கணக்கில் தமிழ்நாட்டு மீனவர்கள் பலியாகியிருந்தமையினை மறந்துவிடக்கூடாது.

போருக்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.எனினும் அதை தடுக்க இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.


No comments