கோத்தபாயவின் வருக்கு எதிர்ப்பு!! ஐரோப்பிய ஆலோசனை அவை முன் போராட்டம்!!

தமிழினப் படுகொலையாளியின் Scotland  நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய ஆலோசனை அவை (France, Strasbourg ) முன்றலில் கவனயீர்பு போராட்டம் 29/10/2021 நடைபெற்றது.

தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழினப் படுகொலையாளியும் தற்போதைய சிறிலங்கா அரச அதிபருமான கோத்தபாய ராயபக்சே எதிர்வரும் 01/11/2021 Scotland நாட்டில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு வருகைதர இருக்கின்றார்.  அவ் வருகையினை எதிர்த்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் 01/11/2021 - மு.ப 11 மணிக்கு கண்டன எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று 29/10/2021 ஐரோப்பாவின் தலை நகரமாக இருக்கூடிய France , Strasbourg மாநகரத்தில் ஐரோப்பிய ஆலோசனை அவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போராட்டத்தில்:

* தமிழினப் படுகொலையினை திட்டமிட்டே மேற்கொண்ட குற்றவாளி கோத்தபாய ராயபக்சேவினையும் , மகிந்த ராயபக்சேவினையும்… கைது செய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

* காலம் தாழ்த்தாது தமிழினப் படுகொலையின் விசாரணையினை ஆரம்பிக்க அனைத்து நாடுகளும் குரல்கொடுக்க வேண்டும்.

* தமிழர்களை பாதுகாக்க ஒரே தீர்வா தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழமே அமைய முடியும்…

மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைத்து ஊடகங்களினை சந்தித்தும் ஐரோப்பிய ஆலோசனை அவையினிலும் மனு கையளிக்கப்பட்டன.  

தமிழினத்தை அழித்தவர்கள் தண்டிக்கபட்டு எமக்கான தீர்வாக தமிழீழமே அமையும் வரை நாம் அயராது போராடுவோம் என போராட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளகளினால் சூழுரைக்கப்பட்டது. மற்றும் பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் தங்கள் வரலாற்றுக்கடமையினை உணர்ந்து எதிர்வரும் 01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

No comments