தமிழக மீனவரது உடலம் கரை ஒதுங்கியது!
இலங்கை கடற்படை படகு மோதி; நேற்று செவ்வாய்கிழமை கடலில் மூழ்கி காணாமல் போன தமிழக மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

மீனவரின் சடலம், காரைநகர் - கோவளம் கடலில்  இருந்து, இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராசு ரஜிகரன் (வயது 27) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


No comments