மோடியை குளிர்விக்க ஓடுகிறார் கோத்தா!இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் எதிர்வரும் புதன்கிழமை இருப்பர் எனஇந்தியாவின் நியூஸ் 18 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் உத்தியோகபூர்வ 24 பேர் குழு ஒன்றும், 125 புத்தபிக்குகளும் இருப்பர் என நியூஸ் 18 குறிப்பிட்டுள்ளது.

 குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு கொழும்பிலிருந்து நேரடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ செல்லவுள்ள நிலையில், அன்றையதினமே பிரதமர் மோடியால் இவ்விமானநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

அந்தவகையில், பிரதான பெளத்த புனித இடமொன்றான குஷிநகரில் தரையிறங்கவுள்ள முதலாவது சர்வதேச விமானமான இலங்கை விமானம் அமையவுள்ளது. குஷிநகருக்கு இலங்கையிலிருந்து உட்பட உயர் எண்ணிக்கையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments