நாடு திரும்பிய இளைஞன் ஊரில் பலி!சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி மடத்தடி பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிளில் விபத்தில் , சங்கத்தனையை சேர்ந்த நிரோஷ் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.  

குறித்த இளைஞன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மையில் விடுமுறையில் நாடு திரும்பி தனது சொந்த ஊரில் விடுமுறையை கழித்த நிலையிலையே நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

No comments