மிச்செல் பச்லெட்டின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிப்பு!!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில்  ​முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது.

மெய்நிகர் முறைமையின் ஊடாக உரையாற்றும் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அக்குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை தாங்கள் நிராகரிப்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு நீண்டதோர் அறிக்கையையும் அனுப்பிவைத்துள்ளார்.

அவ்வறிக்கையில்:-

கொவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய மற்றும் அழுத்தமான சவால்களின் கீழ், சமூக வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாக நாங்கள் கருதுகின்றோம்.

எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாம் வெளிப்படையாக இருக்கின்றோம், பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments