கொரோனா சிகிச்சையின் பின்னரும் தொற்றா?

கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதன் பின்னரும், சில தினங்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதற்குரிய சாத்தியம் காணப்படுவதாக ஹோமாகமை வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துஷார கலபொட தெரிவிக்கின்றார்.

கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் நூற்றில் ஒரு வீதமானவர்களுக்கு பல்வேறு உடல் நல குறைப்பாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. வீடுகளிலேயே சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்களுக்கு சிகிச்சையின் பின்னரான கஸ்டங்கள் இல்லை என்பதோடு ஏற்படுவதும் குறைவாகும். 

எனினும் சிகிச்சையின் பின்னர் 14 நாட்கள் தனிமைப்புடுத்தலை நிறைவு செய்தவர்களுக்கு சில பிரச்சினைகள் காணப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. கடினமான வேலைகளை செய்யும் போது தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மூச்சு திணறல்கள் ஏற்படும். உடல் நிலையில் சோர்வு ஏற்படும். அது மாத்திரமின்றி அவ்வப்போது இருமல், தலைவலி, நெஞ்சு வலி ஆகியன ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி சிறிது காலத்திற்கு ஞாபக மறதி தொடர்பிலான பிரச்சினைகளும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் அனைத்து தொற்றாளர்களுக்கும் ஓரே மாத்திரி ஏற்படுவதில்லை. ஒவ்வொரு தொற்றாளர்களுக்கும் வெவ்வேறான அறிகுறிகள் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments